கண்ணீர் அஞ்சலி

அஸ்வின்

தாய் மடியில் : 01, Aug 2012 — இறைவன் அடியில் : 28, Aug 2016வெளியீட்ட நாள் : 03, Sep 2016
பிறந்த இடம் - கனடா
வாழ்ந்த இடம் - கனடா
கனடா Markham ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அஸ்வின் பாஸ்கரன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

இதய அன்புடன் உலவும் பாஸ்கரனின்
இனிய மைந்தனின் துயரப் பிரிவு.....!!!!!!!

கருவறையில் இருந்து இறங்கி
சிறிது காலம் செல்லும் முன்னே
கல்லறை சென்றாயடா கண்ணா!

எங்களின் நினைவுகள கலைத்து
இதயத்தை வருத்தி
இறைவனடி சென்றாயட கண்னே!

இளையன் அஸ்வின் மௌனம் ஆனான்
இதயம் அழுதிடும் அஞ்சலி செய்வோம்!
உதய வாழ்விலே உலாவும் முன்னரே
வெறுமையாகிப்போனது இளையவன் காலம்....
தாங்கள் மண்ணைவிட்டு விண்ணைத்தொட்டு விட்டாலும்
என்றென்றும் எமது கண்ணீரும் துயரமும் முற்றுப்பெறாது!

இறைவன் பாதம் தொழுவோம் நாமும்
இளையவன் ஆத்மா சாந்திபெற

அன்னாரின் திருவுடல் 31-08-2016 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும்.

அன்னாரை இழந்து துயறுரும் அவரது பெற்றோர், சகோதரர், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.


தகவல்ரூபன்(சுவீடன்)

தொடர்புகளுக்கு

பாஸ்கரன் — கனடா

தொலைபேசி: +14163173055